சாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்?
சாகப்போகும்போது என்னடா செய்தான் அவன்?
ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். கோடிக்கணக்கில் சொத்து. பல இடங்களில் தோட்டங்கள் பண்ணைகள்.
அவருக்கு 48 வயதில் உடல் நலமில்லாமல் போய் விட்டது. செலவழித்து வைத்தியம் பார்த்தும் பயனில்லாமல் போய் விட்டது. ஜாதகத்தைப் பார்த்த இரண்டொரு ஜோதிடர்களும் நீங்கள் ஐம்பது வயதைத் தாண்டுவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே அந்த மனிதர் ஒரு முடிவிற்கு வந்து, அதைச் செய்ல படுத்தும் முனைப்பில், உயில் ஒன்றை எழுதி அதைப் பதிவு செய்தும் வைத்து விட்டார். அத்துடன் அதன் பிரதியை தன் நண்பர்கள் இருவரிடம் (in closed cover) கொடுத்து விட்டார்
எதிர் பார்த்தபடியே அடுத்து வந்த ஆறாவது மாதம் மனிதர் காலமாகி விட்டார்.
அதற்குப் பிறகு என்ன ஆனது?
இப்போது அது முக்கியமில்லை.
மனிதர் உயிலில் என்ன எழுதியிருந்தார்?
வாருங்கள், அதைப் பார்ப்போம்!
இருபத்தைந்து பக்க உயிலில் இருந்த முக்கியமான சாராம்சங்கள்:
1. என் மனைவி கோமதிக்கு நகைகளின் மேல் தீராத காதல். அவளுக்கு என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்து சென்னையில் உள்ள பெரிய நகைக் கடையில் கொடுத்து, அவள் விரும்பும் நகைகளை அந்தப் பணத்தின் மூலம் வாங்கிக் கொடுக்க வேண்டியது. அந்தப் பணத்தை வேறு எந்தக் காரியத்திற்கும் பயன் படுத்தக் கூடாது. அத்துடன் அடையாறில் உள்ள பெரிய வீட்டை அவளுடைய பயன் பாட்டிற்குக்
கொடுத்து விட வேண்டியது!
2. என் மகள் மஞ்சுளாவிற்கு உடைகள் மேல் நீராத பற்று. அவளுக்கு என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து சென்னை பனகல் பார்க்க அருகில் உள்ள பெரிய, பெரிய துணிக் கடைகளில், அவள் விரும்பும் வண்ணத்திற்கு ஆடைகளாக எடுத்துக்
கொடுத்துவிட வேண்டியது. அந்தப் பணத்தை வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது.
3. என் மகன் பாலாஜிக்கு, கார்களின் மேல் தீராத மோகம். அவனுக்கு, என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து இரண்டு கோடி ரூபாய்களை எடுத்துக் கொடுத்து Benz, BMW, Volkswagen Beetle, Nisan Teena, Toyota Land cruiser, போன்று சந்தையில் உள்ளLuxury Car களில் நான்கை வாங்கிக் கொடுத்து விட வேண்டியது. அத்துடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டையும்
அவனுக்குக் கொடுத்துவிட வேண்டியது.
4. என் மைத்துன ராமசாமி எப்போது பார்த்தாலும் “மனிதனுக்கு ஆரோக்கியம் மட்டுமே தேவை. பணம் முக்கியமில்லை - health is better than wealth!” என்று சொல்லிக்கொண்டிருப்பான். அவனுக்கு உடற்பயிற்சிக்கு உதவும் treadmill ஒன்றை வாங்கிக் கொடுத்து விடவும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நல்ல treadmill கிடைக்கும். அதற்குத் தேவையான ஐம்பதாயிரம் ரூபாயை என் லாக்கரில் உள்ள பணத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது!
5. இது தவிர உள்ள எனது சொத்துக்கள் அனைத்தையும், வங்கி டெபாஸிட்டுக்கள் உட்பட, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்குக் (Library) கொடுத்து விட வேண்டியது. அதன் மதிப்பு சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் தேறும். அதை வேறு எந்தக் காரியத்திற்கும் பயன் படுத்தக்கூடாது.

No comments:
Post a Comment