Sunday, 24 February 2013


தாயாகினேன்



தாயாகினேன்- நீ தோள் சாய
தலைகோதி - இதழாடினேன்
முதல் மகனாய் என்னுள்
 உணர் மாற்றம் தந்தாய்
நினைவாக நெஞ்சோடு
தீயாய் சுட்டாய்
கண்ணோடு காணாமல்
கண்கள் ஏங்குது நித்தம்
உன் நெஞ்சோடு
கண் தூங்க.....
கொண்டது மனமிங்கு பித்தம்
உன் அருகாமை நிலம் துஞ்ச
பெண்மையின் விழி கெஞ்ச
இமையோரம் வழிகின்ற
நீரும் சொன்னது காதல்
நீ இதழாலே துடைக்காயோ
உள்ளுக்குள் மூண்டது ஊடல்
கொஞ்சம் அணைப்பாய் என்றே
உடல் தகிப்பாய் நின்றேன்
கவி பூவிற்குள்ளே
என் சிலிர்ப்பை சொன்னேன்
புரியாமல் சென்றாயோ
புரிந்தே தான் வென்றாயோ
கடல் நீரை போல் வந்து
அள்ளிச் சென்றாய்
இவள் விழி சேர்ந்து இணையாடி
மனம் துள்ளச்செய்தாய்.

No comments:

Post a Comment