Sunday, 24 February 2013


அது மிக ரகசியம்

அது மிக ரகசியம்
யாரிடமும் பகிர முடியாத உண்மை
தாயிடமோ தந்தையிடமோ
அவர்களால் ஒற்றுக்கொள்ள
முடியாத கூற்றின் சாயல் அது
ஒரே வயிற்றில் வந்த உறவுகளிடமோ
நிச்சயம் முடியவே முடியாது

அது மனதிற்குள் பத்திரமாய்
காப்பற்றப்பட வேண்டியது
அது மிக மிக ரகசியம்
அது ஒருவருக்குள்ளாக மட்டுமே
புதைந்துவிட வேண்டியது
காதல் இணையிடம்
முற்றிலும் தவறு
இரகசியம் அறிந்த பின்
பறந்து செல்லக்கூடும்
பாராமுகமாய் நின்று பாடாய் படுத்தகூடும்
முற்றிலும் தனிதன்மையின் கூட்டமைப்பு
வெட்ட வெளிச்சமாக்கப்படும்
மனக்கோட்டைகளின் தாழ் திறப்பு
பதின்மராய் நின்ற போதிலும்
அங்கே இரகசியம் ஏதுமில்லை
நட்பின் அந்தரங்க ஆக்கிரமிப்பு.
அது பகிரப்பட வேண்டிய இரகசியம்.

No comments:

Post a Comment